இதை செய்தால் டெங்கு வராது : வில்லேஜ் விஞ்ஞானி செல்லூர் ராஜு பலே ஐடியா! - Seithipunal
Seithipunal

வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கலாம் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை சோலை அழகுபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ராஜு,அப்பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதா என வீடு வீடாக ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர் வாசலில் கிருமி நாசினியான சாணத்தை தெளித்தால் டெங்கு காய்ச்சல் வராது என கூறினார். பண்டைய காலத்தில் பின்பற்றப்பட்ட சானம் தெளிக்கும் முறையை அதற்கான வசதியுள்ள மக்கள் இன்றும் பின்பற்ற வேண்டும் என்றார். சாணம் தெளிப்பதால் வீட்டில் கிருமிகளை அண்டவிடாமல் தடுக்கலாம் என்றும் அவர் கூறினார். பங்களா வீடுகளில் இதனை பின்பற்ற முடியாது என்ற அவர் கிராமப்புற மக்கள் இந்த முறையை பின்பற்றலாம் என்றார்.
Advertisement


Get Newsletter

Seithipunal