உச்சி மலையில் உயிரை விட்ட காதலி, மனமுடைந்த காதலன் எடுத்த துயர முடிவு.!!! - Seithipunal
Seithipunal

காதலி பனி சரிவில் சிக்கி இறந்ததால், மனம் உடைந்து காதலனும் தற்கொலை செய்து கொண்ட துயர நிகழ்வு நடந்துள்ளது. நியூயார்க்கை சேர்ந்த, புகழ்பெற்ற மலையேற்ற வீரர் ஹெய்டன் கென்னடி தனது காதலி பெர்கின்ஸ் உடன் அமெரிக்காவில் உள்ள செங்குத்தான பனி மலையில் ஏறிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென பனி சரிவு ஏற்பட்டது. அந்த பனிச்சரிவில் ஹெய்டன் கென்னடி அதிர்ஷ்டவசமாக தப்பித்துக்கொண்டார். ஆனால், அவரின் காதலி 200 அடி பள்ளத்திற்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். தனது கண்முன்னே, காதலி இறந்ததை கண்டு கென்னடி அதிர்ச்சி அடைந்தார். காதலி இறந்த துக்கம் தாங்காமல், அந்த இடத்திலேயே ஹெய்டன் கென்னடி தற்கொலை செய்துகொண்டார். இந்த நிகழ்வு அனைவரின் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

தவறாமல் இதையும் படிச்சுருங்க..!!

ஒருதலை காதலால் சென்னை வாலிபருக்கு நேர்ந்த கொடுமை.!!

Advertisement


Get Newsletter

Seithipunal