கருணாஸ் நிலையை பார்த்தீர்களா?? தயவு செய்து இதை செய்யுங்க என்று அழுது கேட்கும் அளவிற்கு என்ன நடந்தது? வைரலாகும் வீடியோ - Seithipunal
Seithipunal

கருணாஸ் நிலையை பார்த்தீர்களா?? தயவு செய்து இதை செய்யுங்க என்று அழுது கேட்கும் அளவிற்கு என்ன நடந்தது? வைரலாகும் வீடியோ மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ் மனம் உருகி அளித்த பேட்டி, எனது சகோதரியின் 10 வயது மகள் டெங்கு காய்ச்சலுக்கு இறந்துள்ளார். அதே பகுதியில் மற்றொரு சிறுவனும் இறந்துள்ளார். டெங்கு மிகவும் தீவிரமாக பரவி வருகிறது.. இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகம் உள்ளது. 100 பேருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மட்டுமே உள்ள அரசு மருத்துவமனையில் 1,000 பேர் சிகிச்சை பெற வருகின்றனர். போதிய மருத்துவர்கள் இல்லை..கடும் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.. எனவே, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க கூடுதல் மருத்துவர்களையும், போதுமான அளவில் மருந்து பொருட்களையும் போர்க்கால அடிப்படையில் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மிக வருத்தத்துடன் கேட்டுகொண்டார்.. [embed]https://youtu.be/r1LiD0tdmS8[/embed]
Advertisement


Get Newsletter

Seithipunal