ஜியோவின் அதிரடி தீபாவளி ஆஃபர் : அதிர்ச்சியில் ஏர்டெல்.. வோடோபோன்.! - Seithipunal
Seithipunal

தொலைத்தொடர்பு துறையில் கால் பதித்த நாள் முதலே பல அதிரடி ஆஃபர்களை வழங்கிவருகிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டெலிகாம் நிறுவனமான ஜியோ. அந்தவகையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய ஆஃபரை ஜியோ தீபாவளி தண் தனா தண் பெயரில் வெளியிட உள்ளது. அது என்னவெனில், ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் 3 மாதத்திற்கு 399 ரூபாய் ரீசார்ஜ் செய்யும்போதும் அவர்களுக்கு முழுமையாகக் கேஷ்பேக் அளிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இன்னும் 3 மாதம் ஜியோ வாடிக்கையாளர்கள் இலவசமாக இண்டர்நெட் மற்றும் வாய்ஸ் கால் சேவையைப் பயன்படுத்தலாம். காலை முதலே இந்த சலுகை பற்றிய அறிவிப்பை தனது வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வருகிறது ஜியோ. ஜியோவின் இந்த அதிரடி அறிவிப்பால் போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடோபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.
Advertisement


Get Newsletter

Seithipunal