தமிழகத்தில் பிரதமர் அலுவலக கிளையை திறக்க வேண்டும் : டாக்டர் ராமதாஸ் கேட்பது எதற்காக தெரியுமா..? - Seithipunal
Seithipunal

தமிழகத்தில் பிரதமர் அலுவலக கிளையை திறக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கிண்டலாக கேட்டுள்ளார். தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் பிரதமரை சந்திக்க நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று மதியம் பிரதமர் மோடியை ஓபிஎஸ் மற்றும் மூத்த நிர்வாகிகள் சந்தித்து பேசினார். அவர்கள் அதிமுகவின் உட்கட்சி பிரச்சினைகளுக்காவே டெல்லி செல்கின்றனர் என்று அரசியல் விமர்சகர்கள் உட்பட பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், அவரது டெல்லி பயனத்தை விமர்சித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். https://twitter.com/drramadoss/status/918333578030616577 அதில், டெல்லி பயனத்தை குறிப்பிட்டு, அதிமுக உட்கட்சி சிக்கலை தீர்க்க பிரதமர் அலுவலகக் கிளையை சென்னையில் திறக்கலாம் என்று கூறியுள்ளார். மற்றொரு பதிவில், நாமக்கலில் ஆற்றுப்பாலத்தில் நுரை குவிந்துள்ளதை வைத்து தமிழக அமைச்சரை விமர்சித்துள்ளார். https://twitter.com/drramadoss/status/918333483293880320 அதில், 'ஆற்றுப்பாலத்தில் மலை போல் குவிந்த நுரை குறித்த செய்தியை குறிப்பிட்டு, யாரங்கே! இதுபற்றி ஆய்வு செய்ய அமைச்சர் கருப்பணனை உடனடியாக அழைத்து வாருங்கள்' என்று கூறியுள்ளார். https://twitter.com/drramadoss/status/918333533331980288 மேலும், 'நாமக்கல் பகுதி மக்கள் அதிகமாக சோப்பு போட்டு குளிக்கிறார்கள் போலிருக்கிறது' என்று கூறியுள்ளார்.

தவறாமல் இதையும் படிச்சுருங்க..!!

அரசு ஊழியர்களுக்கு 21 மாத நிலுவைத் தொகையை மறுப்பதன் மூலம் ரூ.26,000 கோடியை ஏமாற்ற அரசு துடிப்பதா? : டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்..!!

பழைய நோட்டுக்களை வாங்க தடை விதித்த நிலையில்,டாஸ்மாக் வாங்கி கணக்கில் ரூ.800 கோடி பழைய ரூபாய் தாள்கள் செலுத்தப்பட்டது எப்படி: டாக்டர் ராமதாஸ் கேள்வி!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal



கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->