எங்க சுத்தி வந்தாலும் இப்ப கொடுத்தே தான் ஆகணும்... காவிரி விவகாரத்தில் கர்நாடகமே பணிந்து எடுத்த முடிவு..? - Seithipunal
Seithipunal

மேகேதாட்டு என்ற இடத்தில் 67.14 டி.எம்.சி. கொள்ளளவுள்ள புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது கர்நாடகம். அந்த அணை கட்டப்பட்டாலும் நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீர் தடையின்றி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என்று இப்போது கூறுவதன் மூலம், தமிழகத்திற்கு தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடக அரசுக்கு இல்லை என்பதும், அதற்காகத் தான் மேகேதாட்டு அணையை கர்நாடகம் கட்டுகிறது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளவாறு தமிழகத்திற்கு காவிரியில் 192 டி.எம்.சி தண்ணீர் தர முடியாது என்று கூறி வருகிறது. மாறாக, ஆண்டுக்கு 100 டி.எம்.சி. முதல் 102 டி.எம்.சி வரை மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் தர இயலும் என்றும், அதற்கேற்ற வகையில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மாற்றியமைக்கும்படி கோரி வருகிறது. வினையின் பயன் வினையிலேயே தெரியும் என்பதனை போல அப்போது அற்ப நீருக்காக அடிதடி போட்ட கர்நாடகம், இப்போது தினமும் 20000 கன அடிக்கு குறையாமல் தண்ணீரை திறந்து விட்டு வருகிறது. எப்போதுமே ஒரு ஆறு எந்த பகுதியில் சமவெளிப்பகுதியை ஏற்படுத்தி அதிக வளமான நிலபரப்பை எற்படுத்துகிறதோ அப்பகுதியே அந்த ஆற்றிற்கு அதிக உரிமை கொண்டாட முடியும் அது தான் விதி. இதனை எந்த வகையில் தட்டி கழித்தாலும், ஆற்றின் நீரோட்டம் அதனை வெட்ட வெளிச்சமாக காட்டி விடும். தற்போது கர்நாடகத்தை உலுக்கி வரும் மழையால், மேட்டூர் அணை நீர்வரத்து 19,225 கனஅடியிலிருந்து, 25,000 கனஅடியாக அதிகரித்து உள்ளது. நீர் திறப்பு 15,000 கனஅடியிலிருந்து 18,000 கனஅடியாக அதிகரிகப்படுள்ளது.  
Advertisement


Get Newsletter

Seithipunal