முதல்வரின் கார் திருட்டு.!! இதுதான் டிஜிட்டல் இந்தியாவா? கலாய்த்து எடுத்த நெட்டிசன்கள்.!! - Seithipunal
Seithipunal

டெல்லி முதல்வரின் கார் திருடு போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் தலைமை செயலகம் அருகே நிறுத்தபட்டிருந்ததாகவும், அந்த காரை மர்ம நபர்கள் திருடிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து, நெட்டிசன்கள் சோசியல் மீடியாக்களில் கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர். முதலமைச்சர் காரையே திருடி செல்கிறார்கள் என்றால், இந்திய முன்னேறி விட்டது என்றுதானே அர்த்தம் என்றும், இதுதான் டிஜிட்டல் இந்தியா என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், நீல நிற சுஸுகி வேகன் ஆர் காரை பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தவறாமல் இதையும் படிச்சுருங்க..!!

பேருக்கு தான் டிஜிட்டல் இந்தியா..!! இந்தியாவில் 50,000 கிராமங்களில் ‘மொபைல் நெட்வொர்க்’ சேவையே இல்லை..!

Advertisement


Get Newsletter

Seithipunal