உலகம் முழுவதும் உஷார் நிலையில்... இன்று பூமியை நெருங்கும் பேராபத்து..? தடுப்பதற்கான நடவடிக்கைகள் தயார் நிலையில்..!! - Seithipunal
Seithipunal

விண்கற்களால் புவிக்கு அதிக பாதிப்பு இல்லை. ஏனென்றால் புவியின் காற்று மண்டலத்தை அடைந்த உடனே ஏற்படும் உராய்வு விசையினால் புவியின் கீழ் வளிமண்டலத்தை அடைவதற்குள் சாம்பலாகி விடும். இருந்த போதிலும் அளவில் பெரிய விண்கற்கள் புவிக்கு பெருத்த சேதாரத்தை உண்டாக்கி விடும். டைனோசர் என்ற இனம் முற்றிலும் அழிந்து போனதே ஒரு விண்கல் தாக்கத்தால் தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தினம் தினம் பல ஆயிரம் விண்கற்கள் புவியை கடந்து செல்லும், ஆனால்  விண்வெளியில் வலம் வந்துகொண்டிருக்கும் 'டிசி4' என்ற விண்கல், பூமியை இன்று (வியாழக்கிழமை) கடந்து செல்லவிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனினும், பூமியிலிருந்து சுமார் 42,000 கி.மீ. தொலைவு வரை வந்து செல்லவிருக்கும் என கூறி உள்ளனர். இருப்பதிலேயே மிக குறைந்தபட்ச தொலைவாக இது இருக்கிறது.  42,000 கி.மீ தொலைவில்  விண்கல் பூமியைக் கடந்துவிடுவதால், பூமியுடன் மோதும் ஆபத்து இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இருந்த போதிலும், விண்கற்களால் பூமிக்கு ஆபத்து நேரிடும் சூழலில், அதனைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புக் கருவிகள் மற்றும் அமைப்புகள், எவ்வாறு செயல்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வதற்கு, இந்த டிசி4 விண்கல்லின் வருகை உதவும் என்று கூறப்படுகிறது.

தவறாமல் இதையும் படிச்சுருங்க..!!

மாறி கை வைத்து மீறிப்போகும் கட்டுப்பாடு… எல்லையில் சீறிப்பாயும் குண்டுகள்… இந்தியா, பாகிஸ்தான் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் பெரிய அழிவை நோக்கி..?

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal



கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->