திருமணம் முடிந்த கையோடு சமந்தா பார்த்த வேலைய பாருங்களேன்.!!! - Seithipunal
Seithipunal

பிரபல நடிகை சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் திருமணம் நடந்துள்ளது. "விண்ணைத் தாண்டி வருவாயா" படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நெருக்கமான காதலன் காதலியாக இருவரும் நடித்தனர். அதன்பிறகு, நாக சைதன்யாவும், சமந்தாவும் நிஜத்திலும் காதலர்களாக மாறினார்கள். ஆரம்பத்தில், இவர்களின் காதலுக்கு நாக சைதன்யாவின் குடும்பத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதிலும் குறிப்பாக, நாக சைதன்யாவின் தந்தையான நாகார்ஜூனா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், அனைத்து எதிர்ப்புகளையும் மீறி இருவரும் காதலில் ஜெயித்தனர். இதனால், திருமணத்துக்கு முன்பே நல்ல மருமகள் என்ற பெயரை சமந்தா எடுத்தார். சமந்தாவின் திருமணமும் நல்லபடியாக நடந்து முடிந்தது. சமந்தா தற்போது தனது பெயரை "சமந்தா அக்னிநேனி" என்று மாற்றிவிட்டார். இந்த தகவலை அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். "அக்னிநேனி" நாக சைதன்யாவின் குடும்ப பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.    

தவறாமல் இதையும் படிச்சுருங்க..!!

திருமண மேடையில் குத்தாட்டம் போட்ட சமந்தா.!!

Advertisement


Get Newsletter

Seithipunal