படுகவர்ச்சியான செல்ஃபியை வெளியிட்டு வாங்கி கட்டிகொண்ட பிரபல நடிகை.!! - Seithipunal
Seithipunal

'தங்கல்' திரைப்படத்தின் நடிகை, தன்னை கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளதை, வலைதளவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அமீர் கானின் நடிப்பில் வெளியான படம் ‘தங்கல்’. இந்த படத்தில், அமீர்கானின் மூத்த மகள் கீதாவாக நடித்தவர் பாத்திமா சனா ஷேக். இவருக்கு இந்த படம் நல்ல பெயரை வாங்கி தந்தது. தற்போது மீண்டும் அமிர்கானுடன் சனா ஷேக் நடித்துவருகிறார். இந்நிலையில், அவர் தனது கவர்ச்சி செல்ஃபியை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், சனாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முதலில் சேலை ஒழுங்காக கட்டுங்கள் என்றும், இப்படி ஒரு போட்டோவை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யலாமா? என்றும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு முன்பு, சனா வெளிநாட்டில் பிகினி உடையில் எடுத்த போட்டோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். அப்போது, முஸ்லீமாக இருந்து கொண்டு, இப்படி கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிடுவது சரி இல்லை என்று பலரும் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.    

தவறாமல் இதையும் படிச்சுருங்க..!!

திருமணம் முடிந்த கையோடு சமந்தா பார்த்த வேலைய பாருங்களேன்.!!!

Advertisement


Get Newsletter

Seithipunal