நடிகர் சந்தானம் உண்மையில் இந்து அல்ல..?! : திடீரென்று கிருத்தவர் ஆனதின் பகீர் பின்னணி..!! - Seithipunal
Seithipunal

நடிகர் சந்தானம் உண்மையில் இந்து அல்ல கிருத்தவர் என்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதன் பின்னணி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் திருமன மண்டபம் கட்டுவதற்காக தொழிலதிபர் சண்முக சுந்தரம் என்பவரிடம் ரூ.3 கோடி கொடுத்துள்ளார். ஆனால் சண்முக சுந்தரம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக கூறப்படுகிறது. அதனால், பணத்தை கேட்க சண்முக சுந்தரம் வீட்டிற்கு சந்தானம் சென்றுள்ளார். அப்போது, தன்னை தாக்கியதாக சண்முக சுந்தரம் போலீஸில் புகார் அளித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, அந்த தொழிலதிபர் பாஜக பிரமுகர் என்றும், அவரை தாக்கிய சந்தானத்தை கைது செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை உட்பட பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சந்தானம் இந்து இல்லை. அவர் ஒரு கிருத்தவர். அதனால் தான் பாஜக பிரமுகரை தாக்கியுள்ளார் என்று பாஜகவினர் நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். அதில், '#சந்தானத்தின் உண்மையான பெயர் ஜான் ஆன்டனி தாம்ஸன்; இவன் ஒரு கிருத்துவன்; கிருத்துவ மிஷினரிகளின் கைகூலி' என்று பதிவிட்டு வருகின்றனர். இது உண்மை இல்லை. உண்மையில் தொழிலதிபர் தமிழிசையின் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் ஆதரவாக பேசிவருகிறார் என்று பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். அதனை மறைக்கவே இப்படி ஒரு செயலில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

தவறாமல் இதையும் படிச்சுருங்க..!!

பாஜக பிரமுகரின் பல்லை உடைத்த சந்தானம் தலைமறைவு : சந்தானத்தை பிடிக்க தனிப்படை அமைப்பு!

இப்படியும் இருக்கிறதா இவர்களுக்குள்..? அடிதடி..பணத்தாசை..வாக்குவாதம் முற்றி கைகலப்பு… சந்தானத்தை சாய்த்த நிகழ்வு..!!

Advertisement


Get Newsletter

Seithipunal